சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை, பவுனுக்கு 560 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன், 51,200 ரூபாய்க்கும், கிராம் 6,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சமீபத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார். இதனால் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.