மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் உச்சத்தில் காணப்பட்ட தங்கம் விலை, சரிவை சந்தித்துள்ளது.
கடந்த 23-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு 275 ரூபாயும், பவுனுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாயும் குறைந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக 4-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,415-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.