போலந்தில் இன்று தான் தீபாவளியா? கொட்டும் பணியில் தீபாவளி கொண்டாடும் இந்தியா்கள்!

போலந்த் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர், இந்திய நேரப்படி இன்று காலை 10 மணியளவில் போலந்த் தமிழ்ச்சங்கம், போலந்த் தெலுங்கு மொழி பேசுவோர் சங்கம், இந்தியத் தூதரகம் ஆகியோா் இணைந்து போலந்த் தலைநகரம் வார்சாவில் கொட்டும் பனியில் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் போலந்த் நாட்டிற்கான இந்தியத் தூதர் நக்மா மொஹமது மாலிக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் ,இங்கு கண்கவர் கலைநிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, குழந்தைகள் பெரியவர்களுக்கான வேடிக்கை வினோத விளையாட்டுகள் உள்ளிட்டவை நடைபெற்றன. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி பேசும் இந்திய வம்சாவளி மக்கள், போலந்து ஐரோப்பிய குடிமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் அறுசுவை உணவும் பரிமாறப்பட்டது.

போலந்த் நாட்டில் பல்வேறு துறைகளில் சாதித்த இந்தியர்களுக்கு தமிழ்ச் சங்கத்தின் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டன. போலந்தில் வாழும் அனைத்து இந்தியர்களையும் மொழி, மத இன வேறுபாடின்றி ஓரணியில் ஒன்றிணைக்கும் முயற்சியில் போலந்த் தமிழ்ச்சங்கம் வெற்றி பெற்றுள்ளதாக தமிழ்ச்சங்கத்தின் தலைவர் காலேஷா யூசுப் தெரிவித்தார்.

கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழா இறுதியில், கடும் பனிப் பொழிவுக்கு மத்தியில் மக்கள் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

RELATED ARTICLES

Recent News