சமையலுக்கு முக்கிய தேவையான வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை சமீபகாலமாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தக்காளியின் விலை 50 ரூபாயை தாண்டியுள்ளது. இதே போல வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்ததுள்ளது. இதன் காரணமாக இலங்கை, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் உள்நாட்டில் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் பருவ மழை காரணமாக பல இடங்களில் வெங்காய விளைச்சல் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால் வெங்காய வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.