ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (5/1/2022) கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, கடலூர், வேலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை (6/10/2022) வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.