தக்காளி உள்ளிட்ட காய்காய்கறிகளின் விலை உயர்வால் பொதுமக்கள் அவதி

திருவாரூர் மாவட்டத்தில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக கிலோ 40 ரூபாயாக விற்று வந்த சின்ன வெங்காயம் தற்போது 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்று வந்த வெண்டைக்காய் இன்று 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு முருங்கைக்காய் இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News