Connect with us

Raj News Tamil

சமன் நிலையில் முடிந்த இன்றைய ஆட்டம்!

விளையாட்டு

சமன் நிலையில் முடிந்த இன்றைய ஆட்டம்!

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. 12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. தொடக்க நாளில் மூன்று ஆட்டங்கள் நடந்தன.. 2ம் நாளில், மூன்று லீக் ஆட்டங்கள் நடந்தன.

முதலில் நடந்த தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆனது. 3ம் நாளான நேற்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 4ம் நாளான இன்றும் மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், 4 மணிக்கு தொடங்கிய 7வது லீக் ஆட்டத்தில் சீனா- தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து, இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமன் ஆனது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top