தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் தக்காளி விலை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்கிறது. உத்தரபிரதேசம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருகிலோ தக்காளி 130 முதல் 140 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட நியாயவிலைக்கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிக்கையில், விலைவாசி உயர்வு நாடெங்கும் மக்களை அச்சுறுத்துகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு போட்டிப்போடும் தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல், ஒன்றிய அரசு உடனே தலையிட்டு உணவுப்பொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.