சென்னை கோயம்பேடு சந்தையில் சென்னைக்கு வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததால், தக்காளி விலை உயர்ந்துள்ளது.
சென்னைக்கு 30 சதவிகிதம் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், கூடுதல் விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது.கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில், ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.80 – 85க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீண்டும் தக்காளி பயிரிடாததால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.