தக்காளியின் விலை கடந்த மாதம் உலகம் முழுவதும் 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்த விலை உயர்வு காரணமாக வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தக்காளி சார்ந்த உணவு பொருட்களை தவிர்க்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் கோயம்பேடு மொத்த சந்தையில் தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 200 விற்ற நிலையில் தற்போது 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும் தக்காளி விற்பனை ஆகிறது.
தக்காளி விலை தற்போது 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கிலோ கணக்கில் அள்ளிச்சென்றனர்.