தக்காளி வரத்து குறைவு காரணமாக ஈரோடு வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு கிலோ தக்காளி கிலோ 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடும் பனிப்பொழிவு தாக்கம், தொடர் முகூர்த்தம், தக்காளி விளைச்சல் பாதிப்பு போன்ற காரணங்களால் ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்தும் குறைந்துள்ளது.
இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி கிலோ 40 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது.