ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரவேண்டிய தக்காளி வராததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை கடைகளில் விலை ரூ.150ஆக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
வரும் வாரங்களில் இரண்டு முகூர்த்த தினங்கள் இருப்பதால் தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அரசின் பண்ணை பசுமை கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.