நாடு முழுவதும் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை இந்தியா முழுவதும் அதிகரித்தது. கடந்த வாரங்களில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாயிலிருந்து 180 ரூபாய் வரை விற்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக காய்கறிகளின் வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தக்காளியின் வரவும் சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று கோயம்பேட்டில் தக்காளியின் விலை ஒரு கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சில்லறை விற்பனையில் தக்காளி, கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. தக்காளியின் விலை சற்று குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.