தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் பழனியில் தக்காளி விலை அதிரடியாக குறைந்து, ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பழனி தக்காளி மார்க்கெட்டில் 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி 600 ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.