விஜய், அஜித்தை தூக்கி வீசிய அமெரிக்கா!

அமெரிக்காவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், 5.54 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்து, பொன்னியின் செல்வன் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில், 5.51 மில்லியின் அமெரிக்க டாலர்கள் வரை வசூலித்து, 2.0 திரைப்படம் உள்ளது.

இதற்கு அடுத்ததாக, 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வசூலித்த கபாலி திரைப்படம் உள்ளது. 4-வது இடத்தில், 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்த விக்ரம் திரைப்படம் உள்ளது. 5 வது இடத்தில், 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்த பேட்ட திரைப்படம் உள்ளது.

இந்த பட்டியலில், ரஜினியின் 2.0 திரைப்படம் தான், நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்தது. தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் அதிகமாக வசூலித்து அந்த சாதனையை முறியடித்துள்ளது. ஆனால், பல்வேறு வசூல் சாதனைகளுக்கு சொந்தக்காரர்களான விஜயின் திரைப்படமும், அஜித்தின் திரைப்படமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.