ரத்தன் டாடா குறித்து பலரும் அறியாத 5 தகவல்கள்! என்னென்ன?

இந்திய தொழிலதிபர்களில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவர் ரத்தன் டாடா. இவர், உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று இரவு காலமானார். இதனை அறிந்த பல்வேறு தரப்பினர், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரத்தன் டாடா குறித்து பலரும் அறியாத 5 முக்கிய தகவல்களை தற்போது பார்க்கலாம்:-

1. ரத்தன் டாடாவுக்கு 10 வயது இருக்கும்போதே, அவர்களது பெற்றோர் பிரிந்துவிட்டனர். இதனால், தனது பாட்டியின் கவனிப்பில் தான், ரத்தன் டாடா வளர்ந்து வந்தார்.

2. கார்னல் பல்கலைக்கழகத்தில் படித்த ரத்தன் டாடா, Architecture பிரிவில், இளங்கலை பட்டத்தை பெற்றார். பின்னர், ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் நிர்வாக திறன் சம்பந்தமான படிப்பை முடித்து, அதில் புலமை பெற்றார்.

3. 1961-ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் தனது பயணத்தை தொடங்கிய ரத்தன் டாடாவுக்கு, ஆரம்பத்தில் தொடக்க நிலையிலான பணியே வழங்கப்பட்டது.

4. 1991-ஆம் ஆண்டு தான் ரத்தன் டாடாவுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவரது பதவிக் காலத்தில், டாடா குழுமம், வெறித்தனமான மாற்றத்தை பெற்றது. உலக அளவில் அதன் கிளைகள், விரிவடைந்தன.

5. இந்தியாவில் உள்ள அனைத்து நடுத்தர வர்க்கத்தினரும் கார் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக, டாடா நானோ என்ற காரை உருவாக்கியிருந்தார். இந்த கார், அந்த சமயத்தில், ரூபாய் 1 லட்சத்திற்கு விற்கப்பட்டிருந்தது.

    RELATED ARTICLES

    Recent News