உலகளவில் 5ஜி வேகத்தில் எந்த நாடு டாப் இடத்தில் இருக்கிறது என்பது குறித்து ஓக்லா டெஸ்டிங் நிறுவனம் புதிய லிஸ்டை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2022 அக்டோபர் மாதம் முதலில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் முக்கிய நகரங்களில் மட்டுமே 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரபல இணைய வேக டெஸ்டிங் தளமான ஓக்லா சர்வதேச அளவில் எந்த நாட்டில் எத்தனை வேகத்தில் 5ஜி சேவை கிடைக்கிறது என்பது குறித்த சர்வே முடிவை வெளியிட்டுள்ளது. அதன் படி ஐக்கிய அமீரகம் தான் உலகளவில் அதிவேக இணைய சேவையைக் கொண்ட நாடாக இருக்கிறது.
அதைத் தொடர்ந்து கத்தார், தென்கொரியா ஆகிய நாடுகள் டாப் 3 இடங்களில் வருகிறது. இந்த லிஸ்டில் இந்தியா 14ஆவது இடத்தை பிடித்துள்ளது.