சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை!

தேனி மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை போன்று கர்நாடகாவிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணை முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் உபரிநீர் 28 ஆயிரம் கன அடிதண்ணீர் அப்படியே, காவிரியில் திறந்துவிடப்படுகிறது. நீர்திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் சூழல் இருக்கிறது.

எனவே, காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள், எச்சரிக்கையுடன் இருக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.