குற்றால அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடைவிதித்தனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த திடீர் மழையால் நேற்று (நவ.16) மாலையில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் கடும் காற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் குளிக்க போலீசார் தற்காலிக தடைவிதித்தனர்.
தொடர்ந்து இன்று (நவ.17) காலையும் இரண்டாவது நாளாக தண்ணீர் வாரத்து குறையாததால் தொடரும் வெள்ளப்பெருக்கால் இரண்டாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.