பொதுமக்கள் மத்தியில் மெட்ரோ ரயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏதாவது இடத்திற்கு மிக வேகமாக செல்ல வேண்டுமானால், மெட்ரோவை தான் பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மெட்ரோ ரயிலின் 2-வது கட்ட பணிகள் நடைபெற உள்ளது.
இதன்காரணமாக, வருகிற 24-ந்தேதி முதல் ஒருவார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. அதன்படி, ஆர்.கே.மட சாலை – மந்தைவெளி சந்திப்பில் இருந்து பிராடிஸ் கேசில் சாலை வரை ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்படும்.
மந்தைவெளியில் இருந்து வாகனங்கள் ஆர்.கே. மடச் சாலையை நோக்கி அனுமதிக்கப்படமாட்டாது. பிராடிஸ் கேசில் சாலையில் இருந்து ஆர்.கே.மடச் சாலை நோக்கி செல்லலாம்.