சுற்றுலா பயணிகளால் நீலகிரி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்..!

தொடர் விடுமுறையை கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிந்துள்ளனர்.

உதகையில் உள்ள பைக்காரா நீர்வீழ்ச்சி, தாவரவியல் பூங்கா, படகு இல்ல ஏரி, உள்ளிட்ட இடங்கள் மட்டுமின்றி குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இதனிடையே சுற்றுலா பயணிகளின் வருகையால் நீலகிரி மாவட்ட மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்தபடி செல்வதால் அப்பகுதி போலீஸார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News