அடித்து துவைத்த கனமழை.. அறுந்து விழுந்த மின்சார கம்பி.. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

தஞ்சாவூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையில் விழுந்த மின்சார கம்பியால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பாலைத்துறை பகுதியில், நேற்று இரவு கனமழை பெய்தது. சூறைக் காற்றுடன் பெய்த இந்த கனமழையால், அங்கிருந்த மரத்தின் கிளை உடைந்து, மின்சார கம்பி மீது விழுந்தது.

இதனால், பாரம் தாங்காமல் மின்சார கம்பியும் அறுந்து, சாலையின் குறுக்கே விழுந்தது. இதையடுத்து, தஞ்சாவூர் – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், மின் விநியோகத்தை நிறுத்திவிட்டு, சாலையின் குறுக்கே விழுந்த மரத்தின் கிளையை அப்புறப்படுத்தினர்.

RELATED ARTICLES

Recent News