டிராபிக் போலீஸ் உங்களை மடக்கினால்..,? உங்களுக்கான உரிமைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்?

சாலையில் சரியான முறையில் போக்குவரத்தின் ஓட்டம் இருப்பதை உறுதி செய்வதும், சாலை விதிகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதும் தான், போக்குவரத்து காவல்துறையினரின் பணி.

ஆனால், ஒருசில நேரங்களில், பொதுமக்கள் அனைத்து விதிமுறைகளையும் சரியாக பின்பற்றிய பிறகும், அவர்களை நிறுத்தி, லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதை, சில காவல்துறையினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், வாகன ஓட்டிகளுக்கான உரிமைகளை, அவரவர் தெரிந்துக்கொள்வது என்பது முக்கியமான ஒன்றாகும். அவை என்னென்ன என்பதை, தற்போது நாம் பார்க்கலாம்..

அடையாள அட்டை:-

போக்குவரத்து காவல்துறையினர் உங்களது வாகனத்தை நிறுத்தினால், அவர்களது அடையாள அட்டையை கேட்பதற்கு, உங்களுக்கு உரிமை உள்ளது. அதாவது, அவர்கள் தங்களது அடையாள அட்டையை அணியாமல் இருக்கும்போது, அதனை கேட்டு வாங்கி, சரிபார்த்துக் கொள்ள உங்களுக்கு உரிமை உள்ளது.

ஓட்டுநர் உரிமம்:-

1988-ஆம் ஆண்டு, மோட்டார் வாகன சட்டம், பிரிவு 130-ன் படி, போக்குவரத்து காவல்துறையினர் உங்களது ஓட்டுநர் உரிமத்தை கேட்டால், நீங்கள் நிச்சயம் காட்ட வேண்டும். ஆனால், உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், அதனை அவரது கைகளிலேயே ஒப்படைப்பதற்கு, நீங்கள் மறுப்பு தெரிவிக்கலாம்.

ஆவண பறிமுதலுக்கான ரசீது:-

உங்களது ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் அல்லது மற்ற ஆவணங்களை, போக்குவரத்து காவல்துறையினர் எடுத்து சென்றால், அவரிடம் அதற்கான ரசீதை கேட்டு வாங்குங்கள். எந்த ஆவணமாக இருந்தாலும், அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தால், அதற்கான ரசீதை அவர்கள் வழங்க வேண்டும்.

Tow செய்வதற்கு மறுப்பு தெரிவிக்கலாம்:-

யாராவது காரின் உள்ளே இருந்தால், நீங்கள் காரை Tow செய்வதற்கு, உங்களது மறுப்பை தெரிவிக்கலாம். யாராவது உள்ளே இருக்கும்போது, காவல்துறையினர் வாகனத்தை Tow செய்யக் கூடாது.

அவதூறாக பேசுதல்:-

போக்குவரத்து காவல்துறையினரால் அவதூறாக நடத்தப்பட்டீர்கள் என்று நீங்கள் நினைத்தால், உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

செல்லான்:-

E-Challan ஜெனரேட்டர் அல்லது அரசாங்கம் விநியோகிக்கும் செல்லுபடியான Challan, போக்குவரத்து காவல்துறையினரிடம் இல்லாமல் இருந்தால், நீங்கள் அதனை மறுக்கலாம். அதாவது, ஏதாவது அங்கீகரிக்கப்படாத Challan-ஐ உங்களிடம் வழங்கினால், அதனை பெறுவதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்கலாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம், அதிகாரிகளுக்கு எவ்வளவு உரிமைகளை வழங்கியிருக்கிறதோ, அதே அளவுக்கு பொதுமக்களுக்கும் பல உரிமைகளை வழங்கியிருக்கிறது. அதனை அவர்கள் தெரிந்துக் கொண்டு, சரியான நேரத்தில் தைரியமாக பயன்படுத்த வேண்டும்.

RELATED ARTICLES

Recent News