தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர், தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன், நேற்று ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்திற்கு விஜய் வரும்போது, சிக்னலை மதிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், காவல்துறையினர், நடிகர் விஜய்-க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இந்த 500 ரூபாய் என்பது விஜய்-க்கு மிகச் சாதாரண தொகையாக இருக்கலாம். ஆனால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.