வன உயிரியல் பூங்காவில் உணவு வழங்கிய போது மான் முட்டியதில் வன பாதுகாவலர் உயிரிழந்தார்.
சேலம் குருவம் பட்டி வன உயிரியல் பூங்காவில் வனவிலங்குகள் காப்பாளர்களாக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன் இன்று வழக்கம் போல மான்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.
அப்போது திடீரென கடம மண் முட்டியதில் தமிழ்ச்செல்வன் படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பணியாளர் முருகேசன் என்பவர் தமிழ்ச்செல்வனை காப்பாற்ற முயன்ற போது அவரையும் மான் முட்டியது.
இதையடுத்து சக ஊழியர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார். முருகேசனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கன்னம்குறிச்சி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணியின் போது வன அலுவலர் மான் முட்டி உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.