மராட்டிய மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் (வயது 41) ஒரு ஓட்டல் அறையில் மயங்கி கிடந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த தொழிலதிபருடன் ஒரு பெண் ஓட்டல் அறையில் தங்கியிருந்தது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் நெருக்கமாக இருக்க அந்த தொழிலதிபர் ஒரே நேரத்தில் இரண்டு வயாகரா மாத்திரைகள் எடுத்துக்கொண்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு விழுந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், மது மற்றும் வயாகரா மருந்து கலவையால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.