புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கனவாப்பேட்டை சேர்ந்தவர் கண்ணன்(50). அப்பகுதியில் கோயில் பூசாாியாக பணியாற்றி வருகிறாா். அவரது மனைவி வள்ளி (45).இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வள்ளிக்கு திடீரென வைற்று வலி காரணமாக அருகில் உள்ள வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்போது அவருக்கு மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளது, தொடர்ந்து வலி ஏற்பட்டதால் விடியற்காலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வள்ளிக்கு மருந்துகளும் ஊசியும் போடப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னா்,வீட்டுக்கு சென்ற வள்ளி திடீரென மயங்கி விழுந்துள்ளார் உடனே அவரை மீட்டு மீண்டும் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வள்ளி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சடைந்த உறவினர்கள் வயிற்று வலி என்று வந்தவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் உயிரிழந்தார் என குற்றம் சாட்டி பிரேதத்தை புதுச்சேரி விழுப்புரம் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து பெண்ணின் இறப்பு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததின் பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு சென்றனர். இச்சம்பத்தினால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்,கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.