விநாயகா் சிலை கரைப்பில் விபரீதம்! 13 ஆக உயா்ந்த பலி எண்ணிக்கை!

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியின் 10வது நாளான ஆனந்த சதுர்த்தியின் போது, விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. சிலை கரைப்பின்போது வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

மகாராஷ்டிராவில் விநாயகர் நிலை கரைப்பின்போது ரத்னகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை எடுத்து செல்லப்பட்டது . அப்போது திடீரென டெம்போ வேனின் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 17 வயது சிறுமி மற்றும் டெம்போ ஓட்டுநர் ஆகிய 2 பேர் பலியாகினர். மேலும், ஜூஹு பகுதியில் சிலை கரைப்பு நிகழ்ச்சியை காண வந்த 16 வயது சிறுவன் உயிரிழந்தான். ராய்காட், சதாரா, நாந்தெட் மாவட்டங்களில் தலா ஒருவர் நீரில் மூழ்கி இறந்தள்ளனா்.

இதனைத் தொடா்து , நாசிக் பஞ்சவாடியில் சிலை கரைப்புக்காகச் சென்ற 3 பேர் மற்றும் நாசிக்கில் சிலை கரைக்கச் சென்ற 3 பேர் என மொத்தம் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதுபோல நாசிக் அம்பாத் எம்.ஐ.டி.சி அருகே உள்ள சுஞ்சாலே சுவாரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் டிராக்டர் மோதி 6 வயது சிறுவன் பலியாகியுள்ளான் விநாயகர் சிலை கரைப்பின்போது மொத்தமாக மகாராஷ்டிரா முழுவதும் 13 பேர் பலியாகியுள்ளனா் .இந்நிலையில் , மகராஷ்டிரா மக்களிடையே இச்செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News