ரீல்ஸ் எடுக்கும் போது விபரீதம்: பள்ளத்தாக்கில் விழுந்து பெண் பலி!

மும்பையில் ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலியானார்.

மும்பையைச் சேர்ந்தவர் ஆன்வி கம்தார். @theglocaljournal என்ற ஐடியின் மூலம் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பயணம் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இவர் தனது நண்பர்களுடன் ஜூலை 16 தேதி அன்று மகாராஷ்டிராவின் ரய்காட் மாவட்டத்தில் உள்ள பிரபலமான கும்பே நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக அங்கிருந்த பாறையில் ஓரத்தில் நின்றபடி வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவர் கால்தவறி 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார்.

இதுகுறித்து அவரது நண்பர்கள் தகவல் கொடுத்ததையடுத்து, போலீசார் மற்றும் உள்ளூர் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ஆன்வியை மீட்டு அருகில் உள்ள மாங்கன் தாலுகா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

RELATED ARTICLES

Recent News