சினிமா
லியோ டிரைலர்.. அதிர்ச்சியில் மூழ்கிய விஜய் ரசிகர்கள்!
லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 30-ஆம் தேதி அன்று, நடைபெற இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த விழா, திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில், அரசியல் தொடர்பான காரணம் இருப்பதாகவும், சிலர் கிசுகிசுத்து வந்தனர்.
இந்நிலையில், லியோ படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. பொதுவாக விஜய் படங்களின் டிரைலர் வெளியாகும்போது, ரோகிணி திரையரங்கில், விழா ஒன்றை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில், இன்று விழா நடத்த, தியைரங்க நிர்வாகத்தினர், காவல்துறையில் அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, டிரைலர் வெளியீட்டு விழாவுக்கும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.