மேற்கு வங்க மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், நியூ ஜல்பைகுரி அருகே சரக்கு ரயில் மீது கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மோதி இன்று (ஜூன் 17) விபத்துக்குள்ளானது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.
இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டதில் 5 பேர் உயிரிழந்தாகவும், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மேற்குவங்க முதுல்வர் மம்தா பானர்ஜி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.