தாம்பரம் அருகே இருவேறு இடங்களில் மின்சாரம் ரயில் மோதியதில் இருவர் உயிரிழப்பு

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் ரயில்வே பாதையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் குப்பை அள்ளும் நபர் என்பதும் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சாரம் ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

அதே போல் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே செல்போன் பேசிய படி கவனகுறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மேற்கு வங்கத்தை சேர்ந்த லல்லூ (23) என்பவர் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயில் மோதியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

RELATED ARTICLES

Recent News