Connect with us

Raj News Tamil

செங்கல்பட்டு அருகே ரயில் தடம் புரண்டு விபத்து!

தமிழகம்

செங்கல்பட்டு அருகே ரயில் தடம் புரண்டு விபத்து!

விழுப்புரத்தில் இருந்து சென்னை தண்டையார்பேட்டை துறைமுகத்திற்கு இரும்பு மூலக்கூறுகள், உலோக தகடுகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு, 38 பெட்டிகளுடன் விழுப்புரத்திலிருந்து கிளம்பியது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 10:30 மணி அளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்து அடைந்தது.

செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பொழுது பரனுர் ரயில் நிலையத்திற்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் திடீரென தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் சரக்கு ரயில் தடம் புரண்டது. சுமார் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

மேலும் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் பகுதியில் இருந்து மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு ரயில் மீட்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. பிரதான ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளதால் செங்கல்பட்டில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாளை காலை மின்சார ரயில்கள் நேர தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்பு பணிகள் முடிய நாளை மாலை வரை ஆகலாம் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

More in தமிழகம்

To Top