Connect with us

Raj News Tamil

ட்ரெண்டாகும் ‘WeWantGroup2Result’ ஹாஷ்டேக்..!

இந்தியா

ட்ரெண்டாகும் ‘WeWantGroup2Result’ ஹாஷ்டேக்..!

காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வுகளை கடந்தாண்டு மே மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.

இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 55,041 பேர் எழுதினர்.

10 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து காலதாமதம் ஆவதால் விரக்தியடைந்துள்ள தேர்வர்கள், உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை வைத்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பலரும் பதிவிட்டு வருவதால் ‘வி வாண்ட் குரூப் 2 ரிசல்ட்’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top