Connect with us

Raj News Tamil

டிரண்டாகும் மோடி வாஷிங் பவுடர் போஸ்டர்!

அரசியல்

டிரண்டாகும் மோடி வாஷிங் பவுடர் போஸ்டர்!

பாஜக ‘வாஷிங் மெஷின்’ என்றும் மோடி ‘வாஷிங் பவுடர்’ என்றும் விமரிசித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஒரு போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக வாஷிங் மெஷின் என்றும் மோடி வாஷிங் பவுடர் என்றும் விமரிசித்துள்ளார்.

அரசியல் தலைவர்களின் கறைகளைக் கழுவ, மத்திய புலனாய்வு அமைப்புகளை ‘வாஷிங் பவுடராக’ பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக” என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

பாஜக எனும் வாஷிங் மெஷின் அதன் புலனாய்வு அமைப்புகளை (வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை (ICE – Incometax, CBI, ED)) வாஷிங் பவுடராக பயன்படுத்தி நேற்று மும்பையில் மீண்டும் சலவை செய்யத் தொடங்கியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து விமர்சனம் செய்தவர்கள் ஏமாற்றமடைவார்கள். பாட்னாவைத் தொடர்ந்து அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஜூலை 17, 18ல் பெங்களூருவில் நடைபெறும். மும்பை அரசியல் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் உறுதியை வலுப்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், மோடி வாஷிங் பவுடர் அனைத்து கறைகளையும் தூள் தூளாக்கும், அனைத்து ஊழல்வாதிகளையும் அமைச்சர்களாக்குவது உறுதி’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுபோல நெட்டிசன்கள் பலரும் இந்த போஸ்டரை பகிர்ந்து விமரிசித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top