ட்ரெண்டாகும் துருவ நட்சத்திரம் ப்ரோமோ ! ஆறு வருட காத்திருப்பின் வெற்றி !

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் படம்’துருவ நட்சத்திரம்’.இப்படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார் மேலும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு , 2018 ல் வெளிவர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

படத்தின் இறுதிப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இரண்டாவது பாடலான ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதன் முழு லிரிக் வீடியோ வருகிற 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News