அயலான் திரைப்படத்தில் கேப்டனுக்கு அஞ்சலி! – இது உண்மையா?

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு சிவகார்த்திகேயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியுடன் கேப்டனின் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள அயலான் படத்தின் டைட்டில் கார்டிலும் விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். அதாவது என்றென்றும் நினைவில் என டைட்டில் கார்டில் விஜயகாந்த் போட்டோவுடன் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

இது விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி சிவகார்த்திகேயன் ரசிகர்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News