பெரியார் நினைவிடத்தில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை!

தந்தை பெரியாரின் 146-ஆவது பிறந்தநாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், பெரியார் திடலுக்கு நேரில் சென்று அவரின் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய பிறகு, முதல்முறையாக அரசியல் நிகழ்வில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.

விஜய்யுடன் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

RELATED ARTICLES

Recent News