“குடத்த தூக்குடா..” கவுன்சிலரை தலையிலேயே அடித்த அமைச்சர் கே.என்.நேரு! ஷாக்கான பெண்கள்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகு பாறை என்ற பகுதியில், புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா, நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், அதில் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி கவுன்சிலர் புஷ்பராஜ், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் குடம் வழங்கப்பட்டு, அந்த குடத்தில், நீர் தேக்க தொட்டி மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டது. கவுன்சிலர் கீழே அமர்ந்துக் கொண்டு, குடங்களை வாங்கி, தண்ணீர் பிடித்துக் கொடுத்தார். அந்த குடங்களை வாங்கி, அங்கிருந்த பெண்களுக்கு அமைச்சர் நேரு வழங்கி வந்தார்.

இந்நிலையில், திடீரென கோபம் அடைந்த அமைச்சர் கே.என்.நேரு, கவுன்சிலர் புஷ்பராஜை தலையிலேயே தாக்கினார். இதனை கண்டு, அங்கிருந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, தண்ணீர் குடத்தை கவுன்சிலர் சரியாக தூக்கிக் கொடுக்கவில்லை.

இதனால், அமைச்சரே குணிந்து குடத்தை தூக்கிய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக, அவர் கவுன்சிலர் புஷ்பராஜை அடித்தார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

RELATED ARTICLES

Recent News