பாஜக நிர்வாகிக்கு திருச்சி சிவா மகன் கொலை மிரட்டல்..!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சிசிவாவின் மகன் திருச்சி சிவா . திமுக-வில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, விலகி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதனிடையில் பதவி காரணமாக இவருக்கும், சிறுபான்மை அணி தலைவரான மருத்துவர் டெய்சி சரணுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இருவரும் கைபேசியில் ஆபாசமாக உரையாடிய ஆடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் இவர்கள் இணையத்தில் அச்சிடமுடியாத வார்த்தைகளால் திட்டிக்கொள்வது பாஜகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருபடி மேல் சென்ற திருச்சி சிவா, டெய்சியிடம் உன் வீட்டுக்குள் புகுந்து அனைவரையும் வெட்டுவேன் என்றும், உனக்கு விபத்து நடந்தாலோ அல்லது கொல்லப்பட்டலோ அதற்கு நான் தான் காரணம் என்று கூறி மிரட்டுகிறார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.