திமுக மூத்த நிர்வாகியும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, தனது தந்தை மீது கொண்ட அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து அண்ணாமலையின் நம்பிக்கைக்குரிய நபராகவே சூர்யா சிவா செயல்பட்டு வந்தார்.
இதனிடையே ஆபாச ஆடியோ ஒன்று வெளியானதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து கட்சியில் விருந்து விலகுவதாக அறிவித்த சூர்யா சிவா வெளியில் இருந்து அண்ணாமலையின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து “அண்ணாமலையின் பொய் பிம்பம் விரைவில் வெளியே வரும்” என அண்ணாமலைக்கு எதிராக ட்விட் ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் பாஜக நிர்வாக அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பெண்களை மதிக்காதோருக்கு, பாலியல் சீண்டலில் ஈடுபடுவோருக்கு, எப்போதும் போதையில் மிதப்போருக்கு, அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுப்போருக்கு, திமுகவுடன் கள்ள உறவு வைத்திருப்போருக்கு என்றுமே பாஜகவில் இடமில்லை என்பதே பாஜகவின் நிலைப்பாடு! என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் பெயரை வைத்து ஊரில் இருக்கும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் சம்பாதித்து சோறு திங்கும் நாய்கள் எல்லாம் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதை பற்றி பேசக்கூடாது உதயநிதியிடம் எத்தனை முறை நீ சந்தித்து இருக்கிறாய் என்னென்ன அவரிடம் ஆதாயம் பெற்று இருக்கிறாய் என்பதை முதலில் சொல்லு https://t.co/SIIM91h4B8
— Trichy Suriya Shiva (@TrichySuriyaS) July 30, 2023
இதற்கு பதிலடி தரும் விதமாக அண்ணாமலையின் பெயரை வைத்து ஊரில் இருக்கும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் சம்பாதித்து சோறு திங்கும் நாய்கள் எல்லாம் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதை பற்றி பேசக்கூடாது உதயநிதியிடம் எத்தனை முறை நீ சந்தித்து இருக்கிறாய் என்னென்ன அவரிடம் ஆதாயம் பெற்று இருக்கிறாய் என்பதை முதலில் சொல்லு என சூர்யா சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.