மீண்டும் பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யா சிவா..!!

திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்தாண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா சிவாவுக்கும் சிறுபான்மை அணியைச் சேர்ந்த டெய்சி என்பவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாதம் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து தான் பாஜகவில் இருந்து விலகுவதாக சூர்யா சிவா அறிவித்தார். மேலும் இவர் அதிமுகவில் இணைவார் என தகவல் பரவியது.

இந்நிலையில் சூர்யா சிவாவுக்கு பாஜகவில் மீண்டும் பதவி வழங்கப்பட உள்ளது. மாநில ஓ பி சி பிரிவின் மாநில செயலாளர் பிரிவில் மீண்டும் தொடர்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது அறிவிக்கை வாயிலாக தெரிவித்து இருக்கிறார்.

RELATED ARTICLES

Recent News