Connect with us

Raj News Tamil

சபாநாயகர் தேர்தல் – இந்தியா கூட்டணியில் பிளவு?

இந்தியா

சபாநாயகர் தேர்தல் – இந்தியா கூட்டணியில் பிளவு?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்கட்சிகளின் கூட்டு முயற்சியாக இண்டியா கூட்டணியும், இந்தியாவின் பொதுத் தேர்தலை சந்தித்தது.

இதில், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்துக்கான சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில், என்டிஏ சார்பில் ஓம் பிர்லாவும்,
இண்டியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ்-ம் போட்டியிட்டனர்.

இந்நிலையில், இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது. அதாவது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, இண்டியா கூட்டணி மீதான அதிருப்தி குறித்து பேசியுள்ளார்.

அதாவது, “சபாநாயகர் தேர்தலில் இந்தியா கூட்டணி போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தவில்லை. கே.சுரேஷை வேட்பாளராக களமிறக்குவது பற்றி தங்களிடம் பேசவில்லை.

இந்தியா கூட்டணி முடிவு ஒருதலைபட்சமானது” என்று அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார். இதனால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியிடம் இருந்து எந்தவொரு அறிவிப்பும், இதுதொடர்பாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in இந்தியா

To Top