“***தா-னு சொன்ன த்ரிஷா – அதிர்ச்சி அடைந்த விக்ரம்!

பொன்னியின் செல்வன் படம் வெளியான நாளில் இருந்து, எங்கு சென்றாலும், இந்த படத்தை பற்றிய பேச்சு தான் இருக்கிறது. இணையம் முழுக்க, பொன்னியின் செல்வன் படம் தொடர்பான வீடியோக்களும், தகவல்களும் தான் நிரம்பி இருக்கின்றன. இதற்கிடையே, நடிகை த்ரிஷா மற்றும் விக்ரமின் வீடியோ ஒன்றும், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது, பொன்னியின் செல்வன் படத்தின் Promotion பணிகளுக்காக, த்ரிஷா, விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர், நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கு, வித்தியாசமான விளையாட்டு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஒருவர் ஆக்ஷன் மூலம் சொல்லும் ஒரு விஷயத்தை, மற்றவருக்கு கடத்த வேண்டும்.

இதில், வாய் அசைவுகள் மற்றும் கைகளின் சைகைகள் மூலம், த்ரிஷா விக்ரமிடம் ஒரு விஷயத்தை சொல்ல முயற்சித்துள்ளார். அவரின் வாய் அசைவை கவனித்த விக்ரம், அது ஏதோ கெட்ட வார்த்தை என்பதை போல, ஆச்சரியத்துடன் பார்க்கிறார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தை ஆக்கிரமித்து, பல்வேறு தரப்பினரை சிரிக்க வைத்து வருகிறது. மேலும், விக்ரம் படுசுட்டியான ஆள் என்றும், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.