த்ரிஷாவுக்கு கால் முறிவு..! என்ன ஆச்சு..?

90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து கலவையான விமர்சனத்தைப் பெற்றார்.

பின்னர் இப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர், காலில் கட்டுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுப்பயணத்தின் போது, எதிர்பாரத விதமாக கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக நாடு திரும்பியதாகவும் திரைவட்டாரங்கள் தெரிவித்துவருகிறது. மேலும் இதனை உறுதிபடுத்தும் விதமாக , த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கால் கட்டுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.