கடந்த 2002ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் மௌனம் பேசியதே. இப்படத்தின் மூலம் த்ரிஷா கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து ஹரி இயக்கத்தில் வெளியான ‘சாமி’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்தார்.
சாமி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் முன்னணி நடிகையாக மாறினார். இதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.
பின் தெலுங்கிலும் நுழைந்து அங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடந்த 21 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். இடையில் கொஞ்சம் தொய்வு வந்தது, இருப்பினும் ’96’ மற்றும் ‛பொன்னியின் செல்வன்’ படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது.
த்ரிஷா கதாநாயகியாக நடித்து முதன் முதலில் வெளிவந்த படமான ‘மௌனம் பேசியதே’ வெளிவந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகிறது.