லியோ படத்திற்கு பிறகு, நடிகர் விஜய் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகி வரும் இந்த திரைப்படம், மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையிலான விஷயம், இந்த படத்தில் இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது. அதாவது, இப்படத்தின் குறிப்பிட்ட காட்சி ஒன்றில், நடிகை த்ரிஷா நடித்துள்ளாராம்.
மேலும், நடிகர் விஜயும், த்ரிஷாவும் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடியிருப்பதாகவும், தகவல் கசிந்துள்ளது. இதனை அறிந்த விஜய் ரசிகர்கள், செம சர்ப்பரைஸ் ஆகியுள்ளனர்.