இளைஞர்களின் Ring Tone.. நெஞ்சில் விழும் அருவி.. குந்தவைக்கு இது சமர்ப்பணம்..

“இவள் உலக அழகியே… நெஞ்சில் விழுந்த அருவியே..”.. இது வெறும் பாடல் அல்ல.. பல இளைஞர்களின் Ring Tone-ஆக இருக்கிறது என்றால், நம்ப முடியுமா.. அதற்கு காரணம் த்ரிஷா என்ற அந்த 3 எழுத்து மந்திரச் சொல் தான்..

மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, தன் அழகிய முகப் பாவங்களால், ரசிகர்களை மயக்கிய த்ரிஷா, அதன் பிறகு, சாமி, லேசா லேசா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் இதயத்துடிப்பாக மாறினார். சில நடிகைகள் ஆரம்பத்தில் அதிரடியாக நுழைந்து, பரபரப்பாக பேசப்பட்டு, பின் காணாமல் போய்விடுவார்கள்.

ஆனால், நடிக்க ஆரம்பித்ததில் இருந்து, ஹீரோயினாகவோ அல்லது முக்கிய கதாபாத்திரத்திலோ மட்டுமே நடித்து வந்திருக்கிறார். 39 வயதில் ஹீரோயினாக இவரால் மட்டுமே எப்படி நடிக்க முடிகிறது.. அதுவும் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுக்க முடிகிறது என்று ரசிகர்களும், சக நடிகைகளும் புலம்பி வருகின்றனர்.

இவ்வாறு இருக்க, பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தில், குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்திற்காக ஒரு கூட்டம் அந்த படத்திற்கு செல்கிறது. அதில், நடித்துள்ள நடிகர் பட்டாளத்திற்காக ஒரு கூட்டம் அந்த படத்திற்கு செல்கிறது.

இருப்பினும், த்ரிஷா என்ற ஒற்றை நடிகைக்காகவும், ஒரு பெருங்கூட்டம் அந்த படத்திற்கு செல்கிறது என்றால், அது மிகையல்ல.. இன்னும் பல்வேறு வெற்றிகளை குவிக்க வேண்டும் ரசிகர்களும், திரையுலகினரும் அவரை வாழ்த்து வருகின்றனர்.