முத்தம் கொடுத்த குழந்தை உணர்ச்சி வசத்தால் கலங்கிய த்ரிஷா..!

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. ஹீரோக்களுக்கு ஈடாக ரசிகர் பட்டாளாத்தை வைத்திருக்கும் இவர், சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்தில் நடித்தார்.
இப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரிஷா, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் விளம்பர பேனரில் உள்ள இவரது புகைப்படத்திற்கு குழந்தை ஒன்று முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை நடிகை திரிஷா கண்ணீர் எமோஜியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.