Connect with us

Raj News Tamil

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய த்ரிஷா! ரசிகர்கள் ஆச்சரியம்!

சினிமா

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய த்ரிஷா! ரசிகர்கள் ஆச்சரியம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, இவர் தான் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகை என்ற பெருமையையும் வைத்துள்ளார்.

ஆனால், அந்த சாதனையை, தற்போது நடிகை த்ரிஷா முறியடித்துள்ளார். அதாவது, கமல் – மணிரத்னம் ஆகியோர் புதிய திரைப்படம் ஒன்றில் இணைய உள்ளனர்.

இந்த திரைப்படத்தில், நடிகை த்ரிஷா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு, 12 கோடி ரூபாயை சம்பளமாக அவர் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதன்மூலம், அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தை, த்ரிஷா தற்போது பெற்றுள்ளார்.

More in சினிமா

To Top